சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!!

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!!

சவூதி அரேபியாவில் முனிசிபல் மற்றும் ஊரக விவாகரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் பெயரை நகராட்சிகள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்றம் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தகவல் சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பெயர் மாற்றத்திற்கு சவூதியின் வீட்டு வசதி அமைச்சர் Majid Al-Hogail மன்னர் சல்மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அமைச்சகம், செயலகங்கள், நகராட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்திறன்களை மேம்படுத்தவும், நிலையான நாகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை அடைவதையும் இந்த புதிய பெயர் மாற்றம் நோக்கமாக கொண்டுள்ளதாக SPA தெரிவித்துள்ளது.

மேலும் விஷன் 2030 நோக்கங்களுக்கு ஏற்ப மேம்பட்ட நகர்ப்புற சூழலை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஓர் முற்போக்கான நடவடிக்கை என்று சவூதி வீட்டுவசதி அமைச்சர் கூறினார்.

பயனாளிகளுக்கு புதிய சேவைகளை வழங்குவதன் மூலமாக வீட்டு வசதி துறையை வளர்ச்சி அடைய செய்யவும்,மேலும் நகரங்களில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்,நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கு இது முயற்சி செய்கிறது.

குடிமக்களின் வாழ்க்கையை முனிசிபாலிட்டிகள் மற்றும் வீட்டு வசதி துறையானது நேரடியாக பாதிக்கும் என்றார். மேலும் அவை மாநிலத்தின் முக்கியமான கூறுகள் என்று கூறினார்.