சவூதி அரேபியா வேலை வாய்ப்பு நிலவரம்!!

சவூதி அரேபியா வேலை வாய்ப்பு நிலவரம்!!

ரியாத் : 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனியார் துறையில் 153,000 க்கும் மேற்பட்ட சவூதி ஆண்கள் மற்றும் பெண்கள் சவூதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.தனியார் துறையில் வேலைகளைப் பெற்றுள்ளனர்.இதனை மனிதவள மேம்பாட்டு நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் துர்கி பின் அப்துல்லா அல்-ஜாவினி தெரிவித்தார்.

பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு திட்டங்களுக்காக SR. 3.79 பில்லியன் நிதி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.4 மில்லியன் பெண்கள் மற்றும் ஆண்கள் பயன் பெற்றுள்ளனர்.இதன் மூலம் கிட்டத்தட்ட 100000 நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற நிதியின் திட்டங்கள் மற்றும் சேவைகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நன்மையை அதிகரிக்க உதவியது என கூறினார்.

மேலும் சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களை அடைய பங்களிப்பு செய்வதிலும் அது செயல்படுவதாக கூறினார்.