அம்மாவின் மறதி நோயை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மகன்!!
சிங்கப்பூரில் 37 வயதுடைய Chow Zhida Gary என்பவர் தனது அம்மாவின் மறதி நோயைப் பயன்படுத்தி 42000 வெள்ளிப் பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.
சோவ் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதனால் கடன் அதிகமாக சேர்ந்துள்ளது.
அவருக்கு வேலையும் இல்லை. தனது பெற்றோரிடம் பணத்தைப் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடனாளியாக ஆனதால் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவருடைய அப்பா கொடுக்க மறுத்துள்ளார்.
பணத்திற்காக தனது பெற்றோர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க திட்டமிட்டார்.
அம்மாக்கு மறதி நோய் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். அம்மாவுடன் மளிகைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி செல்வார். அச்சமயங்களில் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 38,350 வெள்ளியை எடுத்துள்ளார்.
அதன் பின் 4000 வெள்ளியை எடுத்துள்ளார்.
வங்கி கணக்கில் 39 வெள்ளி மட்டுமே இருந்ததை கண்டவுடன் அதிர்ச்சியும் சந்தேகமும் அடைந்தவுடன் காவல்துறையில் புகார் அளித்தார்.
சோவ் முதலில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் பொயுரைத்தார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதனால் அவருக்கு 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீது மூன்று திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.மேலும் அப்பாவைத் தள்ளி விட்டது, காவல்துறை அதிகாரியை மிரட்டியது உள்ளிட்ட மூன்று கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை தொடங்கும்.