சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவு இப்போது மும்பையில்!!
இந்தியாவின் மும்பை நகரில் சிங்கப்பூரின் உணவுகளை வழங்கும் சிற்றுண்டிச் சாலை திறக்கப்பட்டுள்ளது.
`Makan Lah’ கடையில் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவுகளை உண்ணலாம்.
இக்கடையை சிங்கப்பூரைச் சேர்ந்த சிந்தியா லாவ் தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
சிங்கப்பூரின் உணவுகளைச் சமைப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். வீட்டிற்கு நண்பர்களை விருந்திற்கு வர வைப்பார். பிறகு சிங்கப்பூரின் உணவுகளைச் சமைத்து அவர்கள் அவற்றை விரும்பி சாப்பிடுவதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
அவரது ஆர்வத்தை வர்த்தகமாக மாற்றினார்.
சிந்தியா தனது சிற்றுண்டிச் சாலை சிங்கப்பூரை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பாக மாற வேண்டும் என்ற கனவுடன் செயல்படுகிறார்.