சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!!
ரியாத் : சவூதி அதிகாரிகள் 20,471 பேரை கைது செய்துள்ளனர்.அவர்கள் குடியுரிமை,பணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .
இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது .குடியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக 12,972 பேரும், சட்டவிரோத எல்லைக் கடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக 4,812 பேரும்,தொழிலாளர் சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக 2687 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்றதற்காக 1050 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எத்தியோப்பியன் நாட்டைச் சேர்ந்தவர்கள் 65% சதவீதம், ஏமனைச் சேர்ந்தவர்கள் 36% சதவீதம் மற்றும் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் 2% சதவீதம் பேர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் போது 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விதிமீறல்களில் ஈடுபட்டுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர்களை ஏற்றிச் சென்றதற்காக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.