இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கு!!
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே டெங்கு அதிக அளவில் பரவியது.
ஆனால் இப்போது ஆண்டு முழுவதும் டெங்கு பரவுகிறது.
டெங்கு உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது கடந்த ஆண்டை விட ஒரு மடங்கு உயர்ந்துள்ளது.
டெங்கு பாதிப்பு நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கூடியுள்ளது.
டெங்கு பாதிப்பு பருவநிலை மாற்றம் ஏற்படுவதால் மழைக்காலம் தொடர்வது, காற்றில் ஈர்ப்பதம் அதிகரிப்பது போன்ற காரணங்களால் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.