சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள சவூதி தரவரிசை அணி!!
சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை தென்கொரியாவில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சவூதி தரவரிசை அணி வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு விருதுகளுக்காக போட்டியிட்டனர்.
இதனை புதன்கிழமை அன்று சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ரியாத், ஜித்தா மற்றும் காசிம் ஆகிய இடங்களைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
அதே சமயத்தில் கொரியா தொழில்நுட்ப நிறுவனத்தால் கிழக்கு மாகாணம், மதீனா மற்றும் ஜித்தாவைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவர்களின் குழு கெளரவமான மதிப்பைப் பெற்றுள்ளனர்.
நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களைச் சவூதி அணி கொண்டுள்ளது.
போட்டிக்காக அவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.