தென்கொரியாவில் இரவிலும் சுட்டெரிக்கும் வெயில்!! தவிக்கும் மக்கள்!!
தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருகிறது.
சூரியன் மறைந்த பிறகும் 25°c க்கும் மேல் வெப்பம் நாட்டை வாட்டி வதைக்கிறது.
தொடர்ந்து 26 நாட்களாக இரவிலும் வெப்பதை சந்தித்து வருகிறது.
இந்த நிலை மேலும் 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க பொது மக்கள் குளிர்சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சாரத் தேவை உச்சத்தை தொட்டுள்ளது.
தென் கொரியாவில் வெப்பம் காரணமாக கடந்த சில வாரங்களில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.