ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!!
சிங்கப்பூரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி One Raffles Quay இல் உள்ள ByteDance நிறுவன ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் 169 பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்பாக இரு உணவு சேவை நிறுவனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு உணவு சேவை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Senoko வில் உள்ள Pu Tien Services உணவு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
Northpoint City கடைப்பகுதியில் இருக்கும் Yun Hai Yao உணவு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pu Tien Services உணவு நிறுவனம் தகுந்த நடவடிக்கையை எடுத்ததால் அந்நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று(ஆகஸ்ட் 10) தெரிவித்தது.