எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!!

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜப்பானின் கியூஷு ஷிக்கோகு பகுதிகளில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜப்பானில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டிருந்தது. மாபெரும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஜப்பான் பிரதமர் தனது சுற்றுப் பயணங்களை ரத்து செய்தார்.

மேலும் 1000 க்கணக்கான ஜப்பானியர்களும் தங்களின் விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர்.

விடுக்கப்பட்ட எச்சரிக்கை நிலை இன்று (ஆகஸ்ட் 15) நீக்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் முடிந்து விட்டதாக அர்த்தம் இல்லை என அமைச்சர் கூறினார்.

ஆனால் எதிர்பார்க்கப்படும் பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கு பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.