சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த நபருக்கு mpox தொற்று உறுதி!!
பாகிஸ்தானில் மூன்று பேருக்கு mpox வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களில் முதல் நபர் அண்மையில் அவர் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய நபர் என்பது தெரிய வந்துள்ளது.
34 வயதுடைய அந்த நபர் மர்டானில் வசித்து வருகிறார். சவூதியிலிருந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார்.
அவர் Peshwar க்கு வந்த சிறிது நேரத்திலேயே அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதனை ARY செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் பின் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.
அவருக்கு mpox வைரஸ் தொற்று இருப்பதை Khyber மருத்துவ பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியது.
அவருக்கு நோய் தொற்று இருப்பது ஆகஸ்ட் 13-ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் பயணித்த விமானத்தில் இருந்த சக பயணிகள் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் காண முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்களை கண்காணிக்கவும் முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.
mpox வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், விழிப்புடன் இருப்பதற்கும், பொது சுகாதாரத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தும் வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.