ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!!
ஜப்பானில் தீவான ஹொன்ஷீவை அம்பில் சூறாவளி ஆகஸ்ட் 16(இன்று) நெருங்கியுள்ளது.
அம்பில் சூறாவளியால் ஜப்பானிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 சர்வதேச விமானங்களை ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது.
இதனால் சுமார் 15,000 க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும்,எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டது.
நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் சீக்கிரமாக வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டோக்கியோவிற்கு அருகில் உள்ள சில பகுதிகளில் சுமார் 10000 பேர் தங்கள் வீடுகளை விட்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி இன்று வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காண்டோ பகுதியில் கடுமையான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று(ஆகஸ்ட் 16) காலை காண்டோ பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று நாள் முழுவதும் டோக்கியோ மற்றும் நகோயா இடையிலான புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்படும். இதனை மத்திய ஜப்பான் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.