சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!!

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!!

சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் இருக்கும் D46 நுழைவாயிலில் உள்ள அறையில் X-ray இயந்திரம் தீப்பிடித்தது . அறையில் இருந்து புகை வெளியேறியது.

அதனால் பாலிக்குச் செல்லும் Scoot விமானம் தாமதமாக புறப்பட்டது.

இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 6) காலை சுமார் 6.40 மணியளவில் நடந்தது.

காலை 7.10 மணியளவில் அந்த விமானம் புறப்பட வேண்டியது .ஆனல் 9 மணிக்கு தாமதமாக புறப்பட்டது. பாலியை அது 11.30 மணியளவில் சென்றடைந்ததாக தெரிவித்தது.

அந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக Scoot TR280 விமானத்தின் பயணிகள் D49 நுழைவாயிலில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார்கள்.

அதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு அளிக்கப்பட்டதாக Scoot கூறியது.

தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறு காரணம் என சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.தீயை இரண்டு விமான நிலைய ஊழியர்கள் அணைத்தனர்.

மேலும் பயணிகளிடம் Scoot நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது .